வணக்கங்கள்....



என் எண்ண பட்டறையின்

எதிர் முன்னே நின்று

அதன் வண்ண பக்கத்தை

அசை போட போகும்

உங்களுக்கு.....

Sunday, January 23, 2011

கனவில் ஒரு அனுபவம்

காதலின் அவஸ்தைகளில் இருந்து மீண்டு வந்திருக்கும் ஒருவனின் வாழ்வில், ஒரு பெண் அவனுடனே கனவில் ஒரு வாரம் இருந்திருப்பாளாயின் அதன் நிகழ்வுகளே இந்த கற்பனை கட்டுரை.

---------------------------------------------------------------------------------------------------------

ஏதும் புரியாது சிந்தித்து கார்த்திக் தனது மொபைல் இல் உள்ள காண்டக்ட்ஸ் ஐ எல்லாம் ஒவ்வொன்றாய் பார்த்துக் கொண்டிருந்தான்.அவனுக்கு யாருடனாவது
அப்பொழுது அதிகம் பேச வேண்டும் என்று தோன்றியது ஆனால் யாரும்
கிடைப்பதாய் இல்லை.அதன் விழைவாய் தான் யாராவது கிடைக்க மாட்டார்களா என்று மொபைல்-இன் காண்டக்ட்ஸ்-ஐ ஒவ்வொன்றாக தட்டி விட்டுக் கொண்டிருந்தான். ஒவ்வொரு எழுத்தின் வரிசையும் வர வர அவன் வேகமாக அடுத்தடுத்த தொடர்பின் பெயர்களுக்கு சென்று கொண்டிருந்தான். நேரம் ஆக ஆக அந்த வேகம் கூடியது. J,k,l என எல்லா வரிசையும் முடிந்து கடைசியில் Y வரிசை யோகநாதன் அண்ணனை தாண்டிய பொழுது சிறப்பு எழுத்துக்கள் எனப்படும் special characters வரிசை வர ஆரம்பித்தது. அப்பொழுது அவனுக்கு அந்த தொடர்பின் பெயர் வித்தியாசமாய் இருந்தது. அவன் இதை சேமித்து வைத்திருப்பான் என்று அவனுக்கு நம்பிக்கை இல்லை. ஏனெனில் அவனுக்கு அந்த காண்டக்ட் யாரையும் ஞாபகப்படுத்துவதாக இல்லை. அந்த தொடர்பின் பெயர் "*A%n;i;t!ha...". வெகு நேரும் யோசித்து விட்டு யாரிடமும் பேசுவது நல்லது அல்ல என்று தீர்மானித்து தொலைபேசியை கீழே வைக்கையில் அதில் Message alert tone அடித்தது. யாருடைய msg என்று பார்த்தால் அந்த வினோத தொடர்பிடமிருந்து தான் வந்திருந்தது அந்த மெசேஜ்.
Inbox ஐ செலக்ட் செய்து மெசேஜ் இன் உள்ளே சென்று பார்த்தல் "Call me" என்று இருந்தது.தைரியத்துடன் கால் செய்தான் கார்த்திக். எடுத்த எடுப்பில் எதிர் முனையில் ஒரு பெண் பேச ஆரம்பித்தாள். அதன் பின் அவர்கள் என்ன பேசினார்கள் என்று அவர்களுக்கே வெளிச்சம்.சிறிது நேரத்தில் யதார்த்த பரிமாற்ற உறவாடலுக்கு பிறகு அவளே அவனிடம் உரிமை எடுக்கத் தொடங்கினாள்.அவனும் மனமுவந்து அவன் காதல் தோல்வியினை பற்றி உருக ஆரம்பித்தான். காதல் என்றால் என்ன புரிதல் என்றால் என்ன என்று அவள் புரிய வைக்க ஆரம்பித்தாள். அதையேத்தான் அவன் நினைத்திருந்தான். அடுத்து ஒரு பெண்ணிடம் எத்தகைய அன்பு வைக்க வேண்டுமோ அதை அவள் கூறினாள். எந்த உறவையும் மேற்கோள் காட்டாமல் அவர்கள் உறவு சென்றது. நாட்களும் ஒவ்வொன்றாய் செல்ல ஆரம்பித்தது. அவளுடன் தயங்கி தயங்கி கேட்டு ஒவ்வொரு இடமாக வெளியே செல்ல ஆரம்பித்தான். ஒவ்வொரு பொழுதும் ஒரு விதமாய் அவர்கள் இடையே ஊடுருவி சென்றது.அவள் பிரிகையில் ஏற்பட்ட அன்பை அவளிடமே சொல்லி மாய்ந்தான். அவளும் அத்தகைய உணர்வு கொண்டிருப்பது அவனுக்கு மகிழ்ச்சி அளித்தது. அன்பு பரிமாற்றம் யாரிடமும் எப்போது வேண்டுமானாலும் நிகழும் என்றொரு உண்மை மீண்டும் ஒரு முறை நிருபணமாகிவிட்டது.அத்தனை பரிமாற்றமும் நடந்த அந்த ஒரு வார முடிவில் அவள் பிரியும் வேளையில் அந்த அன்பு உண்மையானதாக இருந்தது என்று கார்த்திக் நன்கு உணர்ந்திருந்தான். முடிவில் அவள் விடை ஏதும் கூறவில்லை. அன்பை மட்டும் தந்து போன அவளுக்கு பிரிவின் உக்கிரத்தை கூற முடியவில்லை. அந்த ஒரு வாரம் முடிகையில், அவள் விடை பெற்று செல்லுகையில் ஒரு மிகச்சிறந்த அன்பும் ஏமாற்றமும் அவனிடம் மிச்சமிருந்தது. கண்ணிர் இல்லை கவலை இல்லை. ஏனெனில் அவன் அவ்வளவு பக்குவம் அடைந்திருந்தான். அவள் அன்பிற்காகவும், அவள் பிரிவிற்காகவும்...
இப்படிக்கு,

விக்...

No comments:

Followers