வணக்கங்கள்....



என் எண்ண பட்டறையின்

எதிர் முன்னே நின்று

அதன் வண்ண பக்கத்தை

அசை போட போகும்

உங்களுக்கு.....

Wednesday, September 22, 2010

எந்திரன் கதை...

             Professor வசீகரன் தன்னுடைய கடின முயற்சியால் ( புதிய மனிதா பாடல் )உருவாக்கிய Chiti என்ற ரோபோவை International Robotic Conference - இல் அறிமுக படுத்துகிறார் (இங்கயே தொடங்கி விடும் கிராபிக்ஸ் அட்டகாசங்கள். சிட்டி செய்யும் வித்தைகளை ARR இன் இசையோடு அனல் பறக்கும் ரோபோ intro). பிறகு அதன் அருமை பெருமைகளையும் அதனுடைய அளவற்ற சக்தியையும் வெளிப்படையாக காண்பிக்கிறார். அதோடு மட்டும் இல்லாமல் அதற்கு  மனிதனுடைய ஆறாம் அறிவை கொடுக்கும் முயற்சியை தொடரப்போவதாக அறிவிக்கிறார்.
 இந்த Conference இல் கலந்து கொண்ட மாணவி சனா-வுக்கு இவரின் திறமை பிடித்து போக இந்த ஆராய்ச்சியிற்காக இவரை பின் தொடர்கிறார். இந்த விறு விறு தேடலில் ஐசு ரஜினி -யை துரத்த அங்கே ஆரம்பிக்கிறது அரிமா அரிமா பாடல்.  Conference க்கு வந்த வில்லன் க்ரூப்ஸ் எப்படியாவது இந்த அபார ரோபோ வை தங்கள் வசப்படுத்த வசீகரனுக்கு தூது அனுப்ப அவர் இதை வேறு எந்த பயன்பாடுக்கும் தர மறுக்கிறார். அங்கே ஆரம்பிக்கிறது வில்லனுக்கும் வசீகரனுக்கும் மோதல்(கண்டிப்பாக ஷங்கர் இங்கே எந்த பஞ்ச் டயலாக்குகளை வைதுருக்க மாட்டார் என நம்புவோமாக).  கடுப்பான வில்லன் சிட்டி யை அழிக்க சதி திட்டம்  தீட்டுகிறான். இந்த இடைவெளியில் சனாவும் ஒரு வழியாக வசீகரனின் மனதில் இடம் பிடிக்கிறார் (உபயம் : ஷங்கர் அவர்களின் Screenplay ). வசீகரனும் தன்னுடைய காதல் பிரேவசத்தை CSSP(Chitti's Six Sense Project) முடிந்தவுடன் ஆரம்பிப்பதாக வாக்குறுதி கொடுக்கிறார்.  சனாவும் வெகு நாளாக காத்திருந்து வெறுத்து  வசீகரனை விட்டு பிரிகிறார். இந்த தருணத்தில் தன்னுடைய CSSP- ஐ  வெற்றிகரமாய் முடிக்கும் வசீகரன் சிட்டி -க்கே தன்னுடைய காதலை ப்ரோக்ராம் செய்து அதன் ஆறாம் அறிவில் பொருத்தி அனுப்புகிறார்.  சனா வை தேடி போய் பார்க்கும் சிட்டி க்கு அவரை மிகவும் பிடித்து போக அங்கே மலர்கிறது ரோபோவின் காதல். இந்த தருணத்தை ஷங்கர் வசமாக பயன்படுத்தி கொண்டு, ஒரு பெரிய தோட்டாதரணி  செட்டில் வைத்து இரும்பிலே ஒரு இதயம் பாட்டை படம் பிடித்துருப்பார்.  சனாவின் மேல் வந்த காதலை சிட்டி வெளிபடுத்தும் விதம் அவளுக்கு பிடித்து போக உண்மையிலேயே தன் மேல் காதல் வந்துவிட்டதாக சிட்டி நம்புகிறது. இதை வசீகரனுக்கு தெரியபடுத்தி தனக்கு  சனா வேண்டும் என்று உரிமை கொண்டாடுகிறது. வசீகரனும் சனாவும் எவ்வளவோ எடுத்து சொல்லியும் புரியாததால் கோபம் அடைகிறார் வசீகரன். அதன் செயல்பாட்டை மாற்ற போவதாக சொல்லிவிட்டு  அங்கிருந்து இருவரும் சென்று விடுகின்றனர். காதல் தோல்வியில் மனம் வெதும்ப, தன்னுடைய வாழ்க்கையையும் வசீகரன் முடித்துவிடுவார் என்ற பயத்திலும் chitti வருத்தமடைகிறது. இந்த சந்தர்பத்தில் வில்லனுடைய ஆட்கள் சிட்டி-யை அழிக்க வருகின்றனர். வசீகரன் தன்னுடைய ஆய்வகத்தில் போய் சிட்டி- யின் செயல்பாட்டை நிறுத்தலாமா வேண்டாமா என்று யோசித்து பிறகு அதை திருத்த முயற்சி செய்யலாம் என்று முடிவெடுக்கிறார். அதே சமயம் வில்லன் groups சிட்டி யை போட்டுத்தள்ள முற்படுகின்றனர். கடுப்பில் இருக்கும் சிட்டி அவர்களை துவம்சம் செய்ய இந்த விஷயம் வசீகரனுக்கு  தெரிய வருகிறது. வேறு வழியே இல்லை சிட்டி யின் சக்திகளை நிறுத்தி  விடுவது தான் ஒரே வழி என்று முடிவெடுக்கும் வேளையில் வில்லன் ஆட்கள் மீண்டும் சிட்டி-யை தாக்க ஒரு பெரும் படையுடன் முயற்சிக்கின்றனர். சண்டை நடக்கும் போது தெரியாமல் வசீகரன் தனது Lab இல் சிட்டி யின் Powers ஐ நிறுத்தி விடுகிறார். துவம்சம் செய்யும் ரோபோ பாதியில் பரிதாபமாக உதை வாங்குகிறது. அதை அழித்து விடாமல் ஏதேனும் ஆதாயம் தேடலாம் என்று முயற்சி செய்கிறான்  வில்லன். ரோபோ வில்லன் வசமாகிறது. இங்கே தான் இண்டர்வல்.
இதற்கு பிறகு படத்தின் முக்கால் வாசி Budget  திரையில் Graphics ஆக வழிந்து  ஓடும்.
வில்லன் கையில் கிடைக்கும்  சிட்டி தன்னை காப்பாற்றும்படி படி கெஞ்சுகிறது. வில்லனும் அதற்கு சம்மதிக்கிறான். ஆனால் தன்னால் அதை மறுபடியும் அதன் உருவத்திற்கே கொண்டு வரமுடியாது எனவும் அதற்கு வசீகரனின் உதவி வேண்டும் என்று கூறுகிறான். வேண்டும் என்றல் சனா வை கடத்தி அதற்கு சம்மதிக்க வைக்கலாமா என்று சராசரி தமிழ் பட வில்லன் மாதிரி chitti இடம் பேசுகிறான். சிட்டி அது எதுவும் தேவை இல்லை தனக்கு தேவை எல்லாம் ஒரு கம்ப்யூட்டர் மட்டும் தான். அது இருந்தால் என்னை மறுபடியும் நானே உறவாக்கிக் கொள்ள முடியும் என்று கூறுகிறது. ஏனென்றால் தன்னுடைய Powers ஐ எல்லாம் எடுத்த வசீகரன் தன்னுடைய Manufacturing Programme & Main Memory   ஐ அழிக்க வில்லை என்று கூறுகிறது. அதுமட்டும் இல்லாமல் தன்னுடைய ஆராய்ச்சியின் அனைத்து File களையும் தன்னுடைய memory இல் வைத்தால் தான் பத்திரமாக இருக்கும் என்று நம்பி வைத்ததாக கூறுகிறது. அதிர்ச்சி அடையும் வில்லன் இது தான் சரியான தருணம் என்று, தன்னை காப்பாற்ற வேண்டும் என்றால்  அந்த programme ஐயும்  மற்ற File களையும் Data Transfer செய்யும் படி கேட்கிறான். சனா வை மீண்டும் அடைந்தே தீரவேண்டும் என்ற வெறியினால் Chitti அவனிடம் அந்த programme ஐ transfer  செய்கிறது. உடனே அவன் ஒரு 100 software மற்றும் mechanical engineers ஐ வேலைக்கு எடுத்து அந்த programme யும் File களையும் ஆய்வு செய்ய சொல்லுகிறான். அவர்களை வைத்து கொண்டு chitti -ஐ  மறுபடி வேறு ஸ்டைல் இல் உருவாக்குகிறான் (இங்கே தான்  பூம் பூம் ரோபோ பாடல்). ஆனால் Chitti க்கே தெரியாமல் ஒரு நூறு Chitti போன்ற ரோபோக்களையும் உருவாக்குகிறான். இது தெரியாத Chitti  சனாவை பார்க்க செல்கிறது. சிட்டியை  தேடி தேடி அலுத்து போகும் வசீகரன் மனம் உடைகிறார். தன்னுடைய புதிய ஸ்டைல்-இல் சனா முன் நிற்கும் Chitti  மீண்டும் தன் காதலை வெளிப்படுத்துகிறது. காதலுக்காக  தான் மறு பிறவி எடுத்து வந்த கதையையும் சொல்லுகிறது. இந்த இடைவெளியில் வில்லன் அந்த 100 ரோபோக்களையும் வசீகரன் மீது ஏவிவிட அவை வசீகரனை துவம்சம் செய்கின்றன. மேலும் பல அட்டகசங்களுக்காக  அந்த ரோப்போக்களை வில்லன் பயன்படுத்துகிறான். வசீகரனுக்கு நேர்ந்ததை நினைத்து கண்ணீர் வடிக்கிறார் சனா. அதை பார்த்ததும் உண்மையான காதல் என்றால் என்ன என புரிகிறது chitti க்கு.  பிறகென்ன கிளிமன்ஜோரோ பாடல் முடிந்தவுடன் 100 வில்லன் ரஜினியை எதிர்த்து ஒற்றை ஆளாக சண்டை போட்டு அதகள கிராபிக்ஸ் உடன் சுபம்....
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எந்திரனை பற்றி நெட் -இல் உலவி கொண்டிருக்கும் போது, படத்தின் கதை என்னவாக இருக்கும் என்று பல ஊகங்களை வாசிக்க முடிந்தது. வந்த ஆர்வத்தில் சரி நாமும் எந்திரனுக்கான கதையை எழுதுவோம் என்று எழுதியதுதான் நீங்கள் மேல படித்த கதை.

குறிப்பு: இந்த கதையில் வரும் கதாபாத்திரங்களும், சம்பவங்களும் எந்திரன் படத்தின் Trailer, பாடல்கள், பேட்டிகள் ஆகியவற்றின் மூலம் வந்த ஊகங்களே.

இப்படிக்கு,
விக்.....

3 comments:

Anonymous said...

Good thinking da... But u have to change your climax...

Anonymous said...

very nice...........

Vick... said...

@anonymous: thanks for ur comment and suggestion....vick

Followers